Colours Night event was held at the Mannar City Hall on Wednesday (09) evening to honor students who achieved achievements in all fields and encouraged teachers in Mannar district.
மன்னார் மாவட்டத்தில் சகல துறைகளிலும் சாதனை படைத்த மாணவர்களையும்,ஊக்குவித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் ‘வர்ண இரவு’ நிகழ்வு நேற்று புதன்கிழமை(09) மாலை மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
-மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில்,மேலதிக மாவட்ட செயலாளர் வை.பரந்தாமன் தலைமையில் குறித்த கௌரவிப்பு நிகழ்வுகள் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டார்.
கௌரவ விருந்தினர்களாக பிரதேச செயலாளர்கள்,வலயக்கல்வி பணிப்பாளர்கள், திணைக்கள தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் விருந்தினர்கள் மற்றும் சகல துறைகளிலும் சாதனை நிலைநாட்டிய மன்னார் மற்றும் மடு கல்வி வலயத்தை சேர்ந்த மாணவர்களும் வாத்திய இசையுடன் மன்னார் நகர மண்டபம் வரை அழைத்து வரப்பட்டனர்.
-பின்னர் மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்று சகல துறைகளிலும் சாதனையை நிலை நாட்டிய மாணவர்கள் விருந்தினர்களினால் கௌரவிக்கப் பட்ட தோடு,அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.
குறித்த நிகழ்வில் மாணவர்கள்,பெற்றோர்,ஆசிரியர்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.